7 மொழிகளில் உருவாகும் படத்துக்காக மஞ்சு வாரியருக்கு பயிற்சி அளித்த பிரபுதேவா

திருவனந்தபுரம்: வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான மலையாள உலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘துணிவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபுதேவாவுடன் இணைந்துள்ள படம், ‘ஆயிஷா’. இதில் பிரபுதேவா நடனப் பயிற்சியில் உருவான ‘கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. பி.கே.ஹரி நாராயணன், சுகைல் கோயா எழுதிய இப்பாடலை, ஜெயச்சந்திரன் இசையில் இந்திய மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்த  பின்னணி பாடகர்கள் பாடினர். விஷ்ணு  சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மஞ்சு வாரியருடன் இணைந்து ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா  லத்திபா, ஐக்கிய அரபு அமீரகம் சலாமா, பிலிப்பைன்ஸ் ஜெனிபர், நைஜீரியா சரஃபினா, ஏமன் சுமையா, சிரியா இஸ்லாம் ஆகியோர் பங்கேற்று இருக்கின்றனர். ஆஷிப் கக்கோடி கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். கிராஸ் பார்டர் கேமரா நிறுவனம் சார்பில் ஜக்காரியா தயாரித்து இருக்கிறார். பெதர்டச் மூவி பாக்ஸ், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட், மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சம்சுதீன்,  ஜக்காரியா வவாத்,  ஹாரிஸ் தேஸம்,   அனீஷ் பி.பி, பினீஷ் சந்திரன் ஆகியோர் தயாரித்த ‘ஆயிஷா’ படம் தமிழ், மலையாளம், அரபு, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 7 மொழிகளில் திரைக்கு வருகிறது என்று படக்குழுவினர் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.