கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன. கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

இந்த நிலையில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்து இருந்தது. மேலும் நாளை மறுநாள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. 

அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ரூ. ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது. 

அதேபோன்று வெள்ளை பூசனி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.