மனைவியை சுமந்துகொண்டு திருமலை படியில் ஏறிய பாகுபலி கணவன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பதி: மனைவியின் சவாலை ஏற்று திருமலை திருப்பதி மலை படிக்கட்டுகளில் மனைவியை தோள் மீது சுமந்துக்கொண்டு கணவர் படியேறிய நிகழ்வு வைரலாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்தவர் வெங்கட சத்யநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் திருமலை திருப்பதிக்கு நடைபயணமாக நேர்த்திக்கடன் செலுத்த சென்றுள்ளனர். மலை படிக்கட்டுகளில் கணவர் சத்யநாராயணா வேகமாக படியேறுவதை கவனித்த லாவண்யா, முடிந்தால் என்னை தூக்கி தோள் மீது வைத்துக்கொண்டு படியேறுங்கள் என சவால் விட்டுள்ளார்.

latest tamil news

மனைவியின் சவாலை ஏற்ற சத்யநாராயணா, அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏற துவங்கினார். மனைவியை சுமந்து கொண்டு கணவன் ஒருவர் ஏழுமலையானை தரிசிக்க படியேறி செல்வதை பார்த்த மற்ற பக்தர்கள் வீடியோ எடுத்தனர். சுமார் 70 படிகள் மனைவியை சுமந்து ஏறினார். பின்னர் லாவண்யா கணவர் தோள் மீதிருந்து இறங்கினார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.