ராஜராஜ சோழனை 'இந்து' என சொல்வது கேவலம் – சீமான் பொளேர்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

கூறுகையில், சாதியும், மதமும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இரண்டு கண்கள் மாதிரி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கோட்பாடே இந்த இரண்டுதான் என கூறினார். அப்போது, குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வினாத்தாளில் அப்துல் கலாம் மற்றும் அம்பேத்கர் சாதி என்ன என்று கேட்கப்பட்டதை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சீமான் தேசிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாக பள்ளி மாணவர்களிடம் தலைவர்களின் சாதி குறித்து கேள்வி கேட்கப்படுவது கண்டனத்துக்குரியது. நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சீமான் ஆவேசமாக கூறினார். அதற்கு கண்டனம் தெரிவித்த எச். ராஜா, ”நீ காணாமல் போய்விடுவாய்” என்று எச்சரிக்கையாக பதிவிட்டிருந்தார்.

கொள்கைகளை கொளுத்துவேன்

அதுகுறித்து சீமானிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது, நான் அதுபோன்ற பாட புத்தகங்களை கொளுத்துவேன் என்று கூறினேன். ஆனால், எச். ராஜா நான் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை கொளுத்துவேன் என்று சொன்னதாக புரிந்துகொண்டார் போல… புத்தகத்தில் அப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று எச். ராஜா கோபப்படுவதில் இருந்தே தெரிகிறது.

உங்களுடைய தலைவர் நாட்டுடைய பிரதமர் மோடியோடே நாங்கள் சண்டை போடுகிறோம்… நீங்கள் எங்களுக்கு பொருட்டே கிடையாது. தயவு செய்து பாஜககாரர்களிடமும், எச். ராஜா குடும்பத்தாரிடமும் கேட்கிறேன் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று பாருங்கள் என்று கிண்டலடித்த சீமான் உங்களுக்கும் மேல் எத்தனை பேர் வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று எச். ராஜாவுக்கு பதில் கொடுத்துள்ளார்.

ராஜராஜ சோழன் இந்துவா?

அதனை தொடர்ந்து ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியுள்ளனர் என்று இயக்குனர் வெற்றிமாறன் பேசியதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான், ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் கையில் மட்டுமே இருந்த சினிமாவை பொதுமைப்படுத்தியது அன்றைக்கு இருந்த திராவிட தலைவர்கள் அண்ணாவும், கலைஞரும்தான். ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை இந்துவும் இல்லை. அவர்களை இந்து மன்னர் என்று பேசுவது வேடிக்கையானது கேவலமானது. உலகத்துக்கே தெரியும் ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்று. சிவனை வழிபட்டவர்கள் என்று. திருவள்ளுவர் சிலைக்கு காவி அணிவித்ததை போல தமிழ்நாட்டில் புகழ் பெற்றவர்களை தனக்காக மாற்றுவதையே ஆரியம் செய்து வருகிறது. கரையான் அரிப்பதை போல ஒவ்வொன்றாக தமிழர் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். அதைத்தான் வெற்றிமாறனும் பேசியுள்ளார் என்று சீமான் தனது ஆதரவை பதிவு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.