கடன் செயலிகள் உஷார் – பணத்தை வசூலிக்க மோசமான முறையை கையாள்கின்றனர்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி நாரா சைதன்யா விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது: கடன் செயலிகள் குறைந்த வருமானம் கொண்டவர்களைத் தான் குறி வைக்கின்றன. கடன் செயலிகள் ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அவசரத்துக்கு கடன் தருகின்றன.

இந்த செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக இருந்தாலும், அந்தப் பணத்தை திரும்ப வசூலிக்க கடன் வழங்கும் நிறுவனங்கள் கையாளும் முறைகள் மிகவும் மோசமானவையாக உள்ளன. ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினால், அதனை குறித்த காலத்துக்குள் பதிவு கட்டணம், நடைமுறை கட்ட ணம், வட்டி என ரூ. 8,000 சேர்த்து மொத்தம் 18,000 கட்ட வேண்டும்.

தவறினால், மொபைலில் மர்ம நபர்களால் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் மொபைலில் வைத்தி ருக்கும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் மொபைல் எண்க ளுக்கு இவர்களைப் பற்றி அவதூறான தகவல்களை அனுப்பு கின்றனர்.

சில நேரங்களில் இவர் களின் படங்களை ஆபாசமாக சித்தரித்தும், நண்பர்கள் உறவினர் களுக்கு பரப்பும் அத்துமீறல்களும் நடைபெற்று வருகின்றன.

பலர் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுபோன்ற மோசடியான 55 கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளோம்.

ஆன்-லைன் கடன் செயலி விஷயத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கடன் செயலிகள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதைஉறுதி செய்த பின் கடன் வாங்க வேண்டும்.

இது போன்ற கடன் செயலி மோசடி இருந்தால் 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.