அவன் அசைவற்று கிடக்கிறான்.. அவனோடு சேர்த்து எங்களையும் கருணை கொலை செஞ்சிடுங்க..! ஒரு தாயின் கண்ணீர் மனு..

நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயபால் – சாந்தா தம்பதியரின் 29 வயது மகன் சேதுபதி..! பிடெக் முடித்து நாகர்கோவில் உள்ள ஆட்டோ மொபைல் தொழிசாலையில் பணிபுரிந்து வந்த சேதுபதி 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி பணியிடத்தில் இருந்தபோது திடீரென்று சேதுபதி மயங்கி விழுந்துள்ளார்.

அரசு மருத்துவமனை கைவிட்டதால் திருவனந்தபுரம், குலசேகரம் தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களை கொட்டி சிகிச்சை அளித்தனர். சொந்தமாக இருந்த ஒற்றை வீட்டையும் விற்று தன் மகனுக்காக சிகிச்சை மேற்கொண்ட இந்த தம்பதியர் தற்போது உதவிக்கு யாருமின்றி நிர்க்கதியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேதுபதிக்கு மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அவருக்கு உடல்நிலை சீராகவில்லை சேதுபதி உணர்வற்ற நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கிறார்

சேதுபதியின் பி.டெக் படிப்பிற்காக பெற்ற கல்விக் கடனை திருப்பி செலுத்தாததால் வங்கியும் நெருக்கடி கொடுத்து வருகிறது இதனால் பெரும் துயரத்திற்கு சேதுபதியின் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளார் .

கடைசி நம்பிக்கையாக தங்கள் மகனை பெங்களூர் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்றும் இல்லை என்றால் எனது மகன் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரையும் கருணை கொலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேதுபதியின் தாயார் சாந்தா நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க தாய் இன்று சந்தித்து மனு அளித்தார்

படித்து வேலைக்கு போய் பையன் தங்களை காப்பாற்றுவான் என்று நம்பிக்கோடு இருந்த நிலையில் மீண்டும் படுத்த படுக்கையாய் தவிக்கும் தங்கள் பையனுக்கு மறுவாழ்வு கிடைக்காதா ? என்ற ஏக்கம் ஏமாற்றமான விரக்தியில் இப்படி யொரு கருணை கொலை மனுவை அளித்திருக்கின்றார் தாய் சாந்தா

அந்த தம்பதியரிடம் இத்தனை லட்சங்களையும் கட்டணமாக பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றால் கூட சேதுபதியை பழைய நிலைக்கு கொண்டுவர இயலவில்லை என்பது தான் இன்றைய தனியார் மருத்துவமனைகளின் தரமாக உள்ளது..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.