கணவரின் சம்பளத்தை அறிய மனைவி போட்ட பலே ஐடியா.. IT, RTI என எதையும் விட்டுவைக்காத உ.பி பெண்!

கணவரின் சம்பள வருமானம் எவ்வளவு என தெரிந்துகொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அணுகியிருக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது.
பொதுவாக எவருக்குமே தங்களது சம்பளம் எவ்வளவு என கேட்பதை விரும்பமாட்டார்கள். நெருங்கிய குடும்பத்தினரோ அல்லது துணையோ தவிர வெறு எவரிடமும் சம்பள விவரங்களை பகிர மாட்டார்கள். ஆனால் சமயங்களில் கணவன் மனைவியிடையேவும் இந்த வேறுபாடு ஏற்படும்.
குறிப்பாக விவாகரத்து பெற நேர்ந்தால் கணவனிடம் இருந்து மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையோ சொத்தில் பங்கோ கொடுக்க வேண்டி வரும். இதனால் சம்பந்தப்பட்ட அந்த கணவர் உணர்வை தாண்டி பொருளாதார ரீதியிலும் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.
அப்படியான சூழலில் கணவர் தன்னுடைய வருமான விவரங்களை கூற மறுத்தால் மனைவி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதனை தெரிந்துகொள்ள வழிவகை உண்டு.
அந்த வகையில்தான் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சு குப்தா என்பவர் 2018-19 மற்றும் 2019-20 ஆகிய நிதியாண்டுகளில் தன்னுடைய கணவர் பெற்ற வருமானம் என்ன என்பதை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருக்கிறார்.

CIC Permits Wife To Access Estranged Husband’s Income Details Through RTI | Read Our Take

▪️Section 8(1)(j) of RTI Act: Information such as assets, liabilities, IT returns, details of investments, lending & borrowing etc is ‘Personal’#VoiceForMenhttps://t.co/gJuSYPC4v5
— Voice For Men India (@voiceformenind) October 3, 2022

பரேலியில் உள்ள மத்திய பொது தகவல் மையமான CPIO-ம், வருமான வரித்துறை அதிகாரியும் முதலில் சஞ்சு குப்தா கேட்ட தகவலை கொடுக்க மறுத்திருக்கிறார்கள். ஏனெனில் அவரது கணவருக்கு அதில் உடன்பாடில்லாததால் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து சஞ்சு குப்தா FAA எனும் மேல்முறையீட்டு ஆணையத்திடம் தன்னுடைய கணவரின் வருமான விவரங்களை கேட்டு மேல்முறையீடு செய்திருக்கிறார். ஆனால் மத்திய பொது தகவல் அலுவரின் உத்தரவு செல்லும் என மேல்முறையீட்டு ஆணையம் கூறியிருக்கிறது.
இதனையடுத்து மீண்டும் மத்திய தகவல் மையத்தில் (Central Information Commission) சஞ்சு குப்தா மேல்முறையீடு செய்ததை அடுத்து உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஆணைகளை ஆய்வுக்குட்படுத்திய பிறகு 15 நாட்களுக்குள் சஞ்சு குப்தா கணவரின் வருமான விவரங்களை வருமான வரித்துறையும் மத்திய பொது தகவல் அலுவலரும் வழங்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 19ம் தேதி உத்தரவிட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.