பிக்பாஸ் தமிழுக்கு போட்டியாக தளபதி விஜயை களமிறக்கும் சன்டிவி

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரம்மாண்டமாக தொடங்குகிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். வழக்கம்போல் விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேர், அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். அதுபோக, யூடியூப் பிரபலம், நியூஸ் ரீடர் ஒருவர், டான்ஸ் மாஸ்டர், வெள்ளித்திரையை சேர்ந்த ஒருவர், மாடலிங்கில் இருக்கும் இரண்டு பேர் என மொத்தம் 21 பேர் இந்த முறை களமிறக்கப்பட இருக்கின்றனர்.

இதனால் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு இப்போதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இதற்கு போட்டியாக சன் டிவி, தளபதி விஜயை களமிறக்க முடிவு செய்திருக்கிறது. பிக்பாஸ் தமிழ் ஞாயிற்றுகிழமை மாலை ஒளிபரப்பப்பாகும்போது, டிஆர்பியில் விஜய் டிவி அதிகம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் அந்த நேரத்தில் பிக்பாஸூக்கு போட்டியாக ஒரு நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அதனால், அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து அண்மையில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. பிக்பாஸ் புரோமோவுக்கு போட்டியாக, பிகில் விளம்பரத்தையும் செய்ய தொடங்கியுள்ளது சன்டிவி. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.