ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து… ஆபத்தில் முடிந்த காரியம் – வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையும், தவறான புரிதல் என்பது பொதுவாகவே இங்கு பலரிடத்திலும் காணப்படுகிறது. குறிப்பாக, மூக்கு சரியில்லை, உதடு பெரிதாக இருக்கிறது, கை விரல்கள் வித்தியாசமாக உள்ளது போன்ற கருத்துகளை கூறுபவர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 

இதை சரிசெய்வதாக கூறி பலரும் பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்கின்றனர். முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது போன்று மருத்துவர்களின் ஆலோசனைபடியும், மருத்துவர்கள் ஆலோசனையில்லாமலும் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில், தனது ஆணுறுப்பை பெரிதாக்க வேண்டும் என நோக்கத்தில் 35 வயதான தாய்லாந்தைச் சேர்ந்த நபர் செய்த செயல் ஒன்று விபரீதத்தில் முடிந்துள்ளது. அதாவது, அவர் தனது ஆணுறுப்பை பெரிதாக்கவும், தடிமனாக்கவும் வேண்டி, இரும்பு வளையத்தை தனது உறுப்பில் மாட்டியுள்ளார். 

மேலும் படிக்க | மூன்றாவது மார்பகம் இருப்பது அழகா அசிங்கமா? இதற்காக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்

நான்கு மாதங்களாக அதை உறுப்பில் மாட்டியிருந்த அவருக்கு, ரத்த ஓட்டம் குறைந்த காரணத்தால் அதில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இரும்பு வளையத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதை அவரால் எடுக்கவே முடியவில்லை. அவரால் அதை எடுக்க முடியாததால், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அவர் கூறியதை கண்டு, மருத்துவர்கள் அதிர்ச்சியான நிலையில், அவரின் பிறப்புறுப்பில் இருந்து இரும்பு வளையத்தை எடுக்க முயன்றனர். ஆனால், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதை அகற்ற மருத்துவர்களால் முடியவில்லை. எனவே, மருத்துவர்கள், உள்ளூர் தீயணைப்பு வீரர்களை  உதவிக்கு அழைத்துள்ளனர். 

தீயணைப்பு வீரர்கள்  தங்களின் வெல்டிங் கட்டர்கள் மற்றும் பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி, பாதுகாப்பாக அந்த இரும்பு வளையத்தை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி அந்த நபரின் பிறப்புறுப்பில் இருந்து அகற்றினர். இருப்பினும், அந்த நபருக்கு பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டது.

இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில்,”சரியான நேரத்தில் அந்த இரும்பு வளையம் அகற்றப்பட்டது. இல்லையென்றால், அது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். சொல்லப்போனால், அவரின் பிறப்புறுப்பு துண்டித்திருக்கவும் வாய்ப்புள்ளது” என்றனர். 

அந்த இரும்பை வெட்டியெடுத்த தீயணைப்பு வீரர்களுள் ஒருவர் கூறுகையில்,”அதை அகற்ற ஒரு மணிநேரம் போராடினோம். அவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, இதுபோல் நான்கு ஆண்டுகளாக செய்து வருவதாகவும், இந்த முறைதான் இப்படி நடந்துவிட்டதாகவும் கூறினார்” என்றார். தொடர்ந்து, ஒரு வார கால சிகிச்சைக்கு பின் அந்த நபர், குணமடைந்து மருத்துவமனையில்  இருந்து வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | 90s கிட்ஸ் தவிர்க்கவும் : 67 வயது ரோமியோவுக்கு 5ஆவது திருமணம் – 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.