கேப்ரில்லாவுடன் காதலா? – உண்மையை போட்டுடைத்த ஆஜித்

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான ஆஜித் மற்றும் கேப்ரில்லா சார்ல்டன் இன்றைய நாளில் அடுத்த தலைமுறை செலிபிரேட்டிகளாக வளர்ந்து வலரும் வருகின்றனர். ஆஜித் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராகவும், தொடர்ந்து நடன நிகழ்ச்சியில் டான்சராகவும் பங்கேற்று கலக்கினார். கேபியின் டான்ஸை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. சிறந்த டான்சர் மற்றும் நடிகையாக புகழ் பெற்றுள்ளார். இருவருமே இப்போது டீனேஜ் வயதை தாண்டியுள்ள நிலையில் படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என கலந்து கொண்டு பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில் பிக்பாஸ் 4வது சீசனில் கேப்ரில்லா மற்றும் ஆஜித் பங்கேற்று இருந்தனர். அப்போதே அவர்கள் இருவரும் நட்பாக இருப்பதை பார்த்து இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. அதன்பிறகு ஆஜித் பாட்டு, நடிப்பு என தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். கேப்ரில்லா விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இருப்பினும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. எனவே, இவர்கள் காதல் பற்றிய கிசுகிசுப்பும் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ஆஜித், 'பிக்பாஸ் வீட்டில் உண்மையில் நிறைய சண்டை போட்டது நானும் கேபியும் தான். ஆனாலும் நாங்கள் உடனே சேர்ந்துவிடுவோம். அதையெல்லாம் எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் எப்போதுமே காதல் எண்ணங்கள் ஏற்பட்டத்தில்லை. நாங்கள் அண்ணன் தங்கை போல் தான் பழகி வருகிறோம்' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.