சர்ச்சையில் இருந்து மீண்ட நடிகருக்கு சங்கடம் தந்த டைட்டில் போஸ்டர்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மலையாளத்தில் வெளியான சட்டம்பி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல யு-டியூப் சேனலில் பேட்டிக்காக சென்றபோது அந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளர் அவரை எரிச்சலூட்டும் விதமாக கேள்விகளை கேட்டார் என கூறி பேட்டியை பாதியிலேயே நிறுத்தி அந்த தொகுப்பாளினியை அநாகரிக வார்த்தைகளில் பேசினார் ஸ்ரீநாத் பாஷி. அதைத்தொடர்ந்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சமயத்தில் அவர் படங்களில் நடிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் அளவுக்கு விஷயம் சீரியஸ் ஆகவே, அந்த பெண் தொகுப்பாளர் நடிகர் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு அவர்மீதான தடையை விளக்குவதற்கும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். சம்பந்தப்பட்ட நடிகரும் அந்த பெண் தொகுப்பாளரிடம் மன அழுத்தத்தில் இருந்ததால், இப்படி பேசிவிட்டேன் என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இப்படி அவர் ஒரு சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து அதாவது புகைப்படம் இல்லாமலேயே சட்டம்பி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஸ்ரீநாத் பாஷி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்று வெளியாகி மீண்டும் அவருக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு நமக்கு கோடதியில் காணாம் (நாம கோர்ட்ல பாத்துக்கலாம்) வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் வார்த்தைகள், சம்பந்தப்பட்ட எதிர்த்தரப்பு நபர்களை மீண்டும் சீண்டுவது போல அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர் .இது தற்போது நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.