சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து?; ஆர்எஸ்எஸ் திடீர் அறிவிப்பு!

விஜயதசமி மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறப்பு பொதுக்கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற மலையேறும் வீராங்கனை சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றில் தலைமை விருந்தினராக ஒரு பெண் கலந்து கொள்ளும் நிகழ்வு இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:

நாட்டில் பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும். பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் அதிகாரம் பெற வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சந்தோஷ் யாதவ் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

எடப்பாடி மகனுக்கு செக்; ஓபிஎஸ்சுக்காக இறங்கிய பாஜக!

சமீப காலமாக இந்து ராஷ்டிரம் பற்றிய கருத்து குறித்து விவாதிக்கப்படுகிறது. பலர் கருத்துடன் உடன்படுகிறார்கள். ஆனால் இந்து என்ற வார்த்தையையே சிலர் எதிர்க்கின்றனர்.

அதே சமயம் அவர்கள் வேறு வார்த்தைகளை பயன்படுத்த விரும்புகிறார்கள். எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. கருத்து தெளிவுக்காக இந்து என்கிற சொல்லை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருப்போம்.

சிறுபான்மையினர் என அழைக்கப்படும் மக்களுக்கு எங்களால் அல்லது அமைப்பு ரீதியான இந்துக்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, சிலர் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இது, ஆர்எஸ்எஸ் அல்லது இந்து அமைப்புகளின் இயல்பு அல்ல. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளுக்கு எப்போதுமே சகோதரத்துவம், நட்புறவு என்ற நிலைத்து நிற்கும் உறுதிப்பாடு உள்ளது.

சனாதன தர்மத்தை தடுக்கும் தடைகள், பாரதத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு விரோதமான சக்திகளால் உருவாக்கப்படுகின்றன. அவை போலியான கதைகளை பரப்புகின்றன.

மேலும், அவை அராஜகத்தை ஊக்குவிப்பதோடு குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றன. அத்துடன் பயங்கரவாதம், மோதல்கள் மற்றும் சமூக அமைதியின்மையை தூண்டுகின்றன.

தொழில் படிப்புக்கு ஆங்கிலம் முக்கியம் என்பது ஒரு கட்டுக்கதை. புதிய கல்வி கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாகவும், தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழி வகுக்க வேண்டும்.

இது, அனைவருக்குமானது. இந்த சமூகம் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.