வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சோலார் பேனல் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இயற்கை வகை மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு, நிறுவன கட்டடங்கள், கால்வாய், ஆறு, ஏரி என பல இடங்களில் சூரிய ஒளி பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சோலார் பேனல்கள் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பாலைவனத்திலும் தாவரங்களை வளர்க்க முடியும். மேலும் குறைந்த செலவில் எதிர்காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை பாதிப்பை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
செயல்படும் முறை
இத்திட்டத்தின்படி வழக்கமான சோலார் பேனல்களுக்கு பதிலாக ‘ைஹட்ரோஜெல்’ பூசப்பட்ட சோலார்பேனல்கள் ஒரு பெரிய உலோக பெட்டியின் மேல் பொருத்தப்படுகின்றன. ைஹட்ரோஜெல் என்பது ஒரு பாலிமர் வேதிப்பொருள். இது இயற்கையாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றி சிறிது சிறிதாக வெளியிடுகிறது. இதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தாவரம் வளர்க்கும் பிளாஸ்டிக் பெட்டியில் விதை விதைத்து ‘கீரை’ செடி வளர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனையாக கோடைகாலமான கடந்த ஜூன் 16ல் 60 கீரை விதை இடப்பட்டது. ஜூலை 1ல் இதில் 60க்கு 57 விதைகள் நன்றாக முளைத்து 18 செ.மீ., உயரம் வரை வளர்ந்தது. பரிசோதனையில் 1519 வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டு வாரத்தில் ைஹட்ரோ ஜெல்லில் இருந்து மொத்தம் 2 லிட்டர் தண்ணீர் கிடைத்தது.

ஒன்றில் மூன்று
இதுகுறித்து விஞ்ஞானி வாங் கூறுகையில், ‘ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் மின்சாரம், தண்ணீர், உணவு என மூன்றையும் தயாரிப்பது எங்கள் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்.கோடை, குளிர்காலத்திலும் ைஹட்ரோஜெல் செயல்படும் இரவில் நீராவியை உறிஞ்சி பகலில் சூரிய ஒளி அதிகரித்த பின் அதை நீராக மாற்றுகிறது. மேலும் இத்தொழில்நுட்பம் மூலம்குடிநீரும் கிடைக்க உதவுகிறது. பாலைவனம், சிறிய தீவுப்பகுதிகளில் இத்திட்டம் ஏற்றதாக இருக்கும். பொருளாதாரரீதியாக இதை மாற்றும் முன் இந்த அமைப்பின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்த வேண்டியுள்ளது’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement