8 வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த வரம் : நெகிழ்ச்சியில் செந்தில் -ஸ்ரீஜா

சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களை விஜய் டிவி கொடுத்திருந்தாலும், அந்த சேனலில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரின் இடத்தை வேறு எந்த சீரியலாலும் பிடிக்க முடியாது. அதிலும், செந்தில் – ஸ்ரீஜா காம்போவிற்கு ரசிகர்கள் மனதில் எப்போதுமே தனியொரு இடம் உண்டு. ரீல் லைப் ஜோடியான இருவரும் ரியல் லைப்பிலும் ஜோடியாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததை பார்த்து ரசிகர்களே வருத்தமடைந்தனர். இந்நிலையில் 8 வருட துயரத்தை போக்கும் வகையில் ஸ்ரீஜா தற்போது தாய்மையடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை இண்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட செந்தில் வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைபார்த்து மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் குழந்தை நலமுடன் பிறக்க வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.