சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா: உறுதியளித்த பக்கிங்ஹாம் அரண்மனை


முடிசூட்டும் விழா 2023 ஜூன் மாதம் 3ம் திகதி முன்னெடுக்கப்படும், இது ராணியாருக்கு செய்யும் அஞ்சலி 

மன்னரின் முடிசூட்டு விழாவானது எப்போது முன்னெடுக்கப்படும் என இதுவரை உறுதி செய்யப்படவில்லை

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழா தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை புதிய தகவலை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, நாட்டின் புதிய மன்னராக சார்லஸ் தெரிவாகியுள்ளார்.
இந்த நிலையில், அவரது முடிசூட்டும் விழாவானது 2023 ஜூன் மாதம் 3ம் திகதி முன்னெடுக்கப்படும் எனவும், இது ராணியாருக்கு செய்யும் அஞ்சலி எனவும் பிரபல பத்திரிகைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா: உறுதியளித்த பக்கிங்ஹாம் அரண்மனை | King Charles Coronation Date Palace Responds

@PA

இதனையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மன்னர் சார்லஸ் முடிசூட்டும் விழா தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் திகதி என அனைத்தும் வெறும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல் மட்டுமே என தெரிவித்துள்ளது.

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டும் விழாவானது பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வருவதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் நடந்து வருகிறது.
ஆனால் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவானது எப்போது முன்னெடுக்கப்படும் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா: உறுதியளித்த பக்கிங்ஹாம் அரண்மனை | King Charles Coronation Date Palace Responds

@getty

மரபுகளை பின்பற்றுவதால் முடிசூட்டு விழாவுக்கு கால தாமதம் ஏற்படும் என்றே அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
காலமான ராணியாருக்கு உரிய முறையில் இறுதி அஞ்சலி செலுத்துவதுடன், துக்க நாட்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்ட பின்னரே, புதிய மன்னருக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறுகின்றனர்.

1952 பிப்ரவரி 6ம் திகதி, தந்தையின் மறைவை அடுத்து எலிசபெத் ராணியாராக தெரிவானார்.
அதன் பின்னர் அவரது முடிசூட்டும் விழாவிற்கு 16 மாதங்கள் காத்திருந்ததாகவும், வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் 1953 ஜூன் 2ம் திகதி முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா: உறுதியளித்த பக்கிங்ஹாம் அரண்மனை | King Charles Coronation Date Palace Responds

@getty

கடந்த 1,000 ஆண்டுகளில் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முடிசூட்டும் விழாவும் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா: உறுதியளித்த பக்கிங்ஹாம் அரண்மனை | King Charles Coronation Date Palace Responds

@PaSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.