சிதம்பரம் கோயிலில் 1955 முதல் 2005 வரை சரிபார்க்கப்பட்ட நகைகளை மீண்டும் ஆய்வு செய்ய சொல்வது உள்நோக்கம் கொண்டது: தீட்சிதர்களின் வழக்கறிஞர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1955-ம் ஆண்டு முதல் 2005 வரை, சரிபார்க்கப்பட்ட நகைகளை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவது உள் நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர் களின் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் சிதம்பரத்தில் உள்ள அவரதுஅலுவலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று கூறியது:

சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், 9 கட்டங்களாக நகைகளை சரி பார்த்து ஆய்வு செய் தனர்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு, நகைகளையோ, கணக் குகளையோ காண்பிக்க வேண்டிய அவசியம் தீட்சிதர்களுக்கு இல்லை. ஆனால் தீட்சிதர்கள், தங்களது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே, கோயில் நகைகள் சரிபார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

இனி வரும் காலங்களில், சட்ட ஆலோசனை பெற்று, பட்டயக் கணக்காளரை கொண்டு, வெளிப்படையாக கணக்குகளை பார்த்து, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில், பொதுவெளியில் கணக்குகளை வெளியிட தீட்சிதர்கள் முடிவு செய்து இருக்கி றார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வரப் பெற்ற நகைகளை சரிபார்த்ததில், எந்தவித தவறுகளையும் இந்து சமய அறநிலையத் துறை கண்டு பிடிக்கவில்லை. தற்போது 1955-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்வதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கேட்கின்றனர்.

அப்படி கேட்பதற்கு சட்டரீதியாக அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?. எந்த சட்டத்தின், எந்த விதியின் அடிப்படையில், அவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள்?.

ஏற்கெனவே நகைகள் சரிபார்க்கப்பட்டு முடிவடைந் தவைகளை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவது உள்நோக்கம் கொண்டது. தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற உள்நோக்கத் தோடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

தீட்சிதர்கள், யாருக்கும் பால்ய விவாகம் செய்து வைக்கவில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் சொல்வதில்லை. சிதம்பரம்நடராஜர் கோயிலை பொறுத்த வரை, திருமணம் செய்தால்தான் பூஜை செய்யலாம் என்று கூறுவது எல்லாம் தவறு. அப்படி எதுவும் இல்லை என்றார்.

கோயில் தீட்சி தர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர் உள்ளிட்ட தீட்சிதர்கள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.