புதுசு புதுசா யோசிக்கிறாங்க! பேருந்து பின்னால் ஸ்கேட்டிங் செய்த நபர்!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில்  கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் ஒருவர் கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார். 

சித்ரா பகுதியில் இருந்து ஹோப்ஸ் காலேஜ் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அவிநாசி சாலையில் வெளிநாட்டவர் ஸ்டாட்டிங் செய்த காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான அவிநாசி சாலையில் ஓடும் பேருந்தில் பின்புறமாக வெளிநாட்டவர் ஸ்கேட்டிங் செய்தார். ஆபத்தை உணராமல் வெளிநாட்டவர் செய்த இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

தற்போது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் படையெடுத்து வர தொடங்கி உள்ளனர்.  ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.  இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.