விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: 2 மணி நேரம் ஒதுக்கும் ரசிகனுக்குத் தரமான படத்தைக் கொடுப்பது எப்படி?

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியர், திரைக்கதை மருத்துவர். ‘கிரியோனி – பிலிம் & ஸ்கிரிப்ட் ஸ்ட்ராட்டஜி கம்பெனி’ என்ற நிறுவனத்தை இவரின் நண்பர் மாணிக்கஜமீனுடன் இணைந்து நடத்திவருகிறார்.

ஒரு ஸ்கிரிப்ட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்புக்கு எடுத்துரைப்பது மட்டுமன்றி, அதைச் சரி செய்து ஒரு வெற்றிப் படத்திற்கான திரைக்கதையாக மாற்றித் தருகிறார். `சிவப்பு மஞ்சள் பச்சை’, `கொலை’ என்ற இரண்டு படங்களுக்கான திரைக்கதையில் பணிபுரிந்திருக்கிறார்.

“ஒரு சினிமாவின் உருவாக்கத்தில் உங்களுடைய பங்களிப்பு எங்கிருந்து துவங்குகிறது? எதுவரை நீள்கிறது?”

“ஸ்கிரிப்ட் டெவலப்மென்ட் ப்ராசஸில் (Script Development Process) எங்கிருந்து வேண்டுமானாலும் எங்களது பங்களிப்பையும் சேவையையும் பெறமுடியும்.

சினிமா ஷூட்டிங்

ஸ்கிரிப்ட் கன்சல்டிங் (Script Consulting): பவுண்டட் ஸ்கிரிப்ட்டுடன் (Bounded Script) வருபவர்களுக்கு அந்தக் கதையைப் பல கோணங்களில் ஆராய்ந்து (Story Core, Characters, Structure, Emotions, Treatment, Plot, Arc, Climax, Experience, etc.,) நிறைகுறைகளை அறிந்து அதைச் சரி செய்ய வழிவகுத்துச் சிறந்த திரைக்கதையாக மாற்றித்தருகிறோம். உதாரணமாக நல்ல கதையாக இருக்கும். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் அது தட்டையாக இருக்கும்.

அந்தத் திரைக்கதையில் ஜானருக்குத் தகுந்த மாதிரி சுவாரஸ்யங்களைச் சேர்க்க யோசனைகளைச் சொல்வோம். காட்சிகளாக வடிவமைத்துக் கொடுப்போம்.

ஸ்கிரிப்ட் மென்டரிங் (Script Mentoring) என்பது ஒரு சிறந்த திரைக்கதையை உருவாக்க ஐடியாவிலிருந்தே எங்கள் வழிகாட்டுதலைப் பெறுவது. ஆரம்பத்திலிருந்து இயக்குநரோடு டிராவல் பண்ணுவோம். ஒரு கதையைச் சரியான முறையில் கட்டமைத்து தருவதுடன், அதை டெவலப் செய்யும் போது ஒவ்வொரு கட்டத்திலும், அதில் எழும் நிறைகுறைகளை ஆராய்ந்து குறைகளைச் சரி செய்வதன் மூலம் குறுகிய நாள்களில், அவர்களால் தரமான திரைக்கதையை உருவாக்க முடியும். கதையை நகர்த்தாத ஒரு காட்சிகூட அந்தப் படத்தில் இருக்காது. அதற்கு நாங்கள் கியாரண்டி!”

“சினிமாவில் உங்களது நோக்கம் என்ன?”

“ஒரு திரைப்படம் திரையிட்டு முடிக்கும் போது இரண்டு மணிநேரம் ஓடியிருந்ததென்றால், அதன் காலம் வெறும் இரண்டு மணி நேரம் மட்டும் அல்ல. அதைத் தற்சமயம் பார்க்கும் எதிர்காலத்தில் பார்க்கப்போகும் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆடியன்ஸ் ஒவ்வொருவரிடமிருந்தும் இரண்டுமணி நேரத்தை அது எடுத்துக்கொள்ளும். ஒரு திரைப்படத்தின் காலம் என்பது அதை எடுத்த படைப்பாளிகளின் ஆயுளைக்காட்டிலும் அதிகமானது. படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் பணத்தை மட்டும் கொடுத்து படம் பார்க்கவில்லை, அவர்கள் வாழ்நாளில் இரண்டுமணி நேரத்தை நமக்காக ஒதுக்குகிறார்கள். அப்படி அவர்கள் ஒதுக்கும் அந்த நேரத்தைச் சிறந்த அனுபவமாக மாற்றித்தருவதே எங்களின் முதன்மையான நோக்கம். இதைச் சிறந்த முறையில் செய்வது தருவதற்காகவே இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் திரைப்படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ மற்றும் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருமே பலனடைவார்கள்… வெற்றியடைவார்கள்!”

ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்

பதிவு செய்ய: https://rb.gy/pkh2o1

“இவ்வளவு பேசுகிறீர்கள். ஏன் நீங்களே ஒரு மெகாஹிட் படத்தை இயக்கி செட்டிலாக வேண்டியதுதானே?”

“நிச்சயமாக படங்கள் இயக்குவோம். வயதும் நேரமும் இருக்கின்றன. அதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. உதவி இயக்குநராக ஆரம்பித்து இன்று திரைக்கதையாசிரியராக மாறியிருக்கிறேன். இனி வரும் காலகட்டத்தில் எங்களைப்போன்ற திரைக்கதை மருத்துவர்களுக்கு தமிழ் சினிமாவில் வேலை அதிகம் இருக்கும்.

இன்றைய கால கட்டத்தில் Executive Producers, Production Managers இவர்களின் உதவியுடன் தயாரிப்பு அனுபவமே இல்லாமல், புதிதாக வரும் தயாரிப்பாளரும் சிறந்த முறையில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்துவிடமுடியும். ஆனால் அந்தப் படம் வெற்றியடைய வேண்டுமென்றால் சிறந்த கதை, திரைக்கதையைத் தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இது இங்குள்ள அனுபவமிக்க தயாரிப்பாளருக்கே சவாலாகத்தான் உள்ளது.

இதைச் சரிசெய்ய, ‘Creative Production’ என்ற கான்செப்ட்டை உருவாக்க உள்ளோம்.

சிறந்த கதை திரைக்கதையை உருவாக்கி, தேர்ந்தெடுத்து, திறமையான குழுவைக்கொண்டு, ப்ராஜெக்டாக டிசைன் (Project Design) செய்து தரவுள்ளோம். இதன்மூலம் பட்ஜெட், கால அளவு வரை ஆரம்பத்திலேயே மிச்சப்படுத்தித் தர முடியும். இதன் மூலம் தரமான, லாபகரமான திரைப்படங்களை இங்கு உருவாக்கமுடியும்.

கடைசியாக, திரைக்கதை எழுத இன்றைய இளம் தலைமுறையினர் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தியரியைக் கற்றுக் கொடுக்கப் போகிறோம்!”

திரைக்கதை வடிவமைப்பாளர் பாலகுமாரன்

விகடன் நடத்தும் `ஸ்க்ரீன்ப்ளே ஒர்க் ஷாப்’ ஒன்லைன் தொடங்கி, கதை எப்படி ஹிட் திரைக்கதையாக… லேயர் லேயராக உருமாறுகிறது என்பதை தியரிகளாக யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கவிருக்கிறார் தமிழ் சினிமாவின் இளம் திரைக்கதைப் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பாலகுமாரன்.

அக்டோபர் 8-ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இடம்: ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை – 2.

பதிவு செய்ய: https://rb.gy/pkh2o1

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.