‘ஆதிபுருஷ்’ டீசர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன் – நடிகர் பிரபாஸ்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசர் கடந்த 2-ம் தேதி அயோத்தியில் வெளியிடப்பட்ட நிலையில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். 

பிரபாஸ் சொன்னது என்ன?

‘ஆதிபுருஷ்’ டீசர் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரபாஸ், “‘ஆதி புருஷ்’ டீசரை முதன்முதலில் 3டி எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீசரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம்.

இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை, அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

image

அயோத்தியில் வெளியிடப்பட்ட டீசர்:

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள படம் `ஆதிபுருஷ்’. இந்தப் படம் இந்தி – தெலுங்கு என இருமொழிகளில் பைலிங்குவல் படமாக தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் நடைபெற்றது.

இந்தப் படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பிரபாஸ், ராகவா என்ற பெயரில் ராமராகவும், க்ரித்தி, ஜானகி என்ற பெயரில் சீதாவாகவும், சைஃப் அலிகான், லங்கேஷ் என்ற பெயரில் இராவணனாகவும் நடித்துள்ளனர். எனவே ராமரின் பிறப்பிடமாக கருதப்படும் அயோத்தியில் இப்படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு.

ட்ரோல் ஆன அதிபுருஷ் டீசரின் சிஜி:

இந்த டீசர் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பாகுபலி – பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே இணையத்தில் யுத்தம் நிகழ்ந்த தருணத்தில், லாட்டரி டிக்கெட்டாக சிக்கியது ஆதிபுருஷ் டீசர். பொம்மை படத்திற்கு இவ்வளவு கோடி பட்ஜெட்டா என்று நெட்டிசன்கள் டீசரை அங்குலம் அங்குலமாக விமர்சிக்க துவங்கினர். இடையில் சீமான் போட்டோ உடன் ஒப்பிட்டு சிலர் ட்ரோல் செய்திருந்தார்கள்.

பெரிய அளவில் டீசர் ட்ரோல் ஆகியிருந்த நிலையில்தான் பிரபாஸ் இத்தகைய கருத்தினை தெரிவித்துள்ளார். இருப்பினும் பல ஹீரோக்கள் தங்கள் படம் குறித்த தகவல்கள் குறித்து சஸ்பென்ஸ் காக்கும்போது, ‘அடுத்தடுத்த அப்டேட்களுக்கு நான் கியாரண்டி’ என்று பிரபாஸ் முன்வந்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.