இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல… வெளிவரும் புதிய பின்னணி


பொதுவாக நடிகர்கள் தங்கள் உண்மையான பெயரை மேடையிலும் திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை

மேகனும் சரி இளவரசர் ஹரியும் சரி, இருவருமே தங்கள் சட்டப்பூர்வமான பெயரில் அறியப்படுவதில்லை.

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் மேகன் இல்லை என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்துகொண்டதன் வாயிலாக, அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கல், உலக நாடுகள் அனைத்தும் அறியப்படும் ஒரு குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானார்.

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல... வெளிவரும் புதிய பின்னணி | Meghan Markle Real Name Isnt Meghan

@getty

பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டாலும், அவரின் ஆதரவாளர்களுக்கும் அவரது உண்மையான பெயர் எது என்பது தெரியாது என்றே கூறப்படுகிறது.

பொதுவாக நடிகர்கள் தங்கள் உண்மையான பெயரை மேடையிலும் திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.
1981 ஆகஸ்டு 4ம் திகதி தாமஸ் மெர்க்கல் மற்றும் டோரியா ராக்லாண்ட் தம்பதிக்கு பிறந்த ரேச்சல் மேகன் மெர்க்கல், பொதுமக்களிடையே மிகப் பிரபலமான Suits நாடகத்தில் 2011 முதல் 2018 வரை தனது சொந்த பெயரான ரேச்சல் என்றே அறிமுகமானார்.

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல... வெளிவரும் புதிய பின்னணி | Meghan Markle Real Name Isnt Meghan

@SplashNews

ஆனால் இளவரசர் ஹரியுடன் அறிமுகமான பின்னர், அவர் மேகன் மெர்க்கல் என்றே அறியப்பட்டார். ரேச்சல் என்ற தனது பெயரை அவர் அதன் பின்னர் பயன்படுத்தியதும் இல்லை.

மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அவர் மெக் என்றே அழைக்கப்பட்டும் வந்துள்ளார்.
மேலும், மேகனும் சரி இளவரசர் ஹரியும் சரி, இருவருமே தங்கள் சட்டப்பூர்வமான பெயரில் அறியப்படுவதில்லை. 

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உண்மையான பெயர் இதுவல்ல... வெளிவரும் புதிய பின்னணி | Meghan Markle Real Name Isnt Meghan

@SplashNews

மேகன் மெர்க்கல் ராஜகுடும்பத்தில் அங்கமாகவிருக்கும் வேளையில், ராணியார் இரண்டாம் எலிசபெத் தான் மேகன் மெர்க்கலின் உண்மையான பெயரையே குறிப்பிட்டு, ரேச்சல் மேகன் மெர்க்கல் என்பவரை தனது பேரன் வேல்ஸின் ஹென்றி சார்லஸ் ஆல்பர்ட் டேவிட் என்பவர் திருமணம் செய்யவிருக்கிறார் என அறிவித்தார்.

அத்துடன், அவர் இனி மேலும் Suits நாடகத்தில் ரேச்சல் என்ற பெயரில் இடம் பெற முடியாது என்பதுடன், அவரது உண்மையான பெயர் ரேச்சல் என்றே அரண்மனை ஆவணங்களில் பதிவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.