உய்குர் முஸ்லிம் விவகாரம்: இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் அசந்து போன சீனா!

Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும், கிழக்கு லடாக்கில் மோதி வருகின்றன. எல்லையில் ஆயுதங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களும் எப்போதும் மோதலுக்கு தயாராக நிற்கும் நிலையும், இந்தியாவை அவமானப்படுத்தும் வாய்ப்பை ஒருபோதும் சீனா தவறவிட்டதில்லை என்பதும் சரித்திரம். ஆனால், இந்த மிகப்பெரிய கருத்து வேறுபாடுகளுக்கும், பிணக்குகளுகும் பின்பும் இந்தியாவின் செயல் சீனாவை திகைப்பில் ஆழ்த்தியிஅது.

நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், மேற்கத்திய நாடுகள் உய்குர் முஸ்லிம்கள் தொடர்பான தீர்மானத்தில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்மொழிந்தன. கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தின. துருக்கி உட்பட பல நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

மேலும் படிக்க | அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு

உய்குர் முஸ்லிம்கள் மீதான, சீனாவின் அடாவடித்தனம் மற்றும் அட்டூழியங்கள் குறித்து கவலைகளை எழுப்பியதுடன், சீனா அவர்கள் மீது உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. சபையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சீனாவுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.  

சீனாவுக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் மொத்தம் 47 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது இந்தியாவும் அதில் முக்கியமான உறுப்பினராக உள்ளது. சீனாவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற, மொத்த வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மேற்கத்திய நாடுகளுக்கு பெரும்பான்மை தேவை. ஆனால் அவற்றுக்க்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாகிஸ்தான், நேபாளம் போன்ற 19 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 17 வாக்குகள் மாத்திரமே கிடைத்த நிலையில், இந்தியா, பிரேசில், உக்ரைன் உள்ளிட்ட 11 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக சீனாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து… ஆபத்தில் முடிந்த காரியம் – வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

வாக்கெடுப்பில் இருந்த விலகிய இந்தியாவின் முடிவு

இந்தியாவின் இந்த முடிவால் சர்வதேச நாடுகளும், குறிப்பாக சீனாவும் திகைத்துப் போயின. எனினும் இது ஒன்றும் புதியது அல்ல என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பிட்ட  ஒரு நாட்டைச் சுட்டிக்காட்டி நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு வாக்களிப்பதில்லை என்பது இந்தியாவின் பாரம்பரியமான கொள்கை.

சீனாவுக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இந்த நேரத்தில் இந்தியா, சீனாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், சீனாவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாக்களிக்கலாம் என்ற தொலைநோக்கு பார்வையிலும் இந்தியா இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்திருக்கலாம் என்று சர்வெதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். 

மேலும் படிக்க | துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.