சரியான நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய எடப்பாடி: தமிழ் மகன் உசேனுக்கு என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அதிமுக இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திடவேண்டும் என அதிமுக அவைதலைவரும், முன்னால் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார்.

பின்னர் தமிழ்மகன் உசேன் அதிமுகவினர் மத்தியில் பேசுகையில், “மீண்டும்

தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் வருகை தந்துள்ளேன். இறைவன் நினைத்தால் நடத்தி தருவான்.

இந்த இயக்கத்திற்கு உழைத்து சின்னாபின்னபடுத்தப்பட்டபோது கட்டிகாப்பாற்ற பாடுபடும் தொண்டனில் நானும் ஒருவன். 1953ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கியவன் நான். 42 வருடம் எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன். செல்ல பிள்ளையாக வைத்திருந்தார். நான் சாதாரணமாக அவைதலைவராக வரவில்லை. இயக்கத்திற்கு பாடுப்பட்டவர்களுக்கு இறைவன் உரிய நேரத்தில் நல்லதீர்ப்பை வழங்குவார்.

எம்ஜிஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி வழிநடத்தபோகிறார் என நினைத்தபோது எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்து தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு வழிநடத்தினார். இதுதொடரவேண்டும். என்னை 2523 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து அவைதலைவராக தேர்வுசெய்துள்ளனர்.

அதற்கு முன்மொழிந்தவர் எடப்பாடி பழனிசாமி. இதனால் என்னை கொலைசெய்துவிடுவேன் என சிலர் மிரட்டினார்கள்.எனது செல்போனில் மிரட்டல் தொடர்பான அழைப்புகள் தான் அதிகம் பதிவாகியிருந்தது. அப்போது என்னை யாருக்கும் தெரியாமல் தனியான இடத்தில் 10 நாட்கள் வைத்து பாதுகாத்தவர் எடப்பாடி.பழனிசாமி.

எந்த வழக்கிலும் வெற்றி பெறப்போவது எடப்பாடி தான். 95 சதவீத இயக்கத்தினர் அவரது தலைமையின் கீழ் உள்ளனர். இதனை தொடர்ந்து பொதுச் செயலாளராக தலைமை ஏற்று அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வழி நடத்தவேண்டும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான இயக்கம் அதிமுக தான் ”என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.