சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து 37 விலை உயர்ந்த மது பாட்டில்களை கடத்திய லாரி டிரைவர் கைது செய்துள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் லாரியை சோதனை செய்த போது மது பாட்டில்கள் சிக்கியது. மதுபாட்டில்களை கடத்திய லாரி டிரைவர் பரந்தாமனை (26) துறைமுகம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
