தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைகழகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி கல்லூரி, ஈரோடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரிகள் தாக்கல் செய்த மனு மீதான விசரணையில் 4 வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
