பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி! இலங்கையை சேர்ந்தவர்கள்…. சிக்கிய பெண்


இலங்கையை சேர்ந்த சிலர் கனடாவில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆரோக்கியம். இவர், சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளது.

பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து பொலிசார் இதில், இலங்கையை சேர்ந்த கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாயினி பிரதீன், பிரதீபன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி! இலங்கையை சேர்ந்தவர்கள்.... சிக்கிய பெண் | Money Fraud Canada Job Police Investigation

இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (45) என்ற பெண் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.