இந்திய வானிலை மையத்தில் 900 அறிவியல் உதவியாளர் காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientific Assistant
காலியிடம்: 990
தகுதி: இயற்பியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், ஐ.டி அல்லது எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18.10.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2022. தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 18-10-2022
மேலும் விவரங்கள் அறிய: https://ssc.nic.in அல்லது https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_IMD_30092022.pdf என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும்.