சில நாட்களுக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற பெண்மணி ஒருவரே பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக திரும்பியுள்ளார்.
அக்டோபர், அதாவது இம்மாதம் 16ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்பட உள்ளது.
பிரெஞ்சு எழுத்தாளரான Annie Ernaux என்னும் பெணம்ணி இந்த வாரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்றதற்காக Annieயை வெகுவாக பாராட்டியிருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
ஆனால், இம்மாதம் 16ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட உள்ள பிரம்மாண்ட பேரணி ஒன்றிற்கு Annie ஆதரவு தெரிவித்துள்ளார்.
Photo: JULIEN DE ROSA / AFP
ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையில் உள்ள பிளவை அதிகரிக்கவும், மற்றவர்களைப் பயன்படுத்தி இலாபமடையவும் மேக்ரான் தற்போதைய பணவீக்கத்தைப் பயன்படுத்திக்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார் Annie.
அந்த அதிர்ச்சி, முதலில் வேலையில் கிடைக்கும் பயன்கள் மூலமாகவும், இப்போது, ஓய்வூதிய அமைப்பின் மூலமாகவும் நமது சமூக பாதுகாப்பின் இதயமாகிய இறையாண்மையின் தூண்களை தாக்க செல்வந்தர்களுக்கான இந்த அரசை அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார் Annie.
பிரச்சினை என்னவென்றால், மேக்ரான் அரசு, பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 65ஆக ஆக்க முயன்று வருகிறது.
அதற்குத்தான் பிரான்சில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.