சென்னை: தமிழகத்தில் இதுவரை 316 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 2ம் வவனை தடுப்பூசி 91 சதவீதத்துக்கும் அதிகமாக போடப்பட்டுள்ளதாக கூறினார். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கையிருப்பு இருக்கும் வரை இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
