தேனி மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படம் வெற்றி பெறுவதற்காக குலுக்கல் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார்.
காளிதாஸ் என்ற அஜித் ரசிகர் சின்னமனூர் பகுதியில் ‘வீரம் உணவகம்’ என அஜித்தின் பட பெயரிலேயே உணவகத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் உணவகத்தை திறந்த இவர் கடை முழுவதும் அஜித்தின் புகைப்படத்தால் அலங்கரித்து உள்ளார்.
நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் வெற்றி பெறுவதற்காகவும் துணிவு திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை கொண்டாடும் விதமாகவும் தனது கடையில் குலுக்கல் பரிசு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
அஜித்தின் நடிப்பில் 61ஆ வது திரைப்படமாக துணிவு படம் வெளியாக உள்ளதால், தனது கடையில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு பரிசு கூப்பன் வழங்குகிறார் . அந்த கூப்பனில் மக்கள் தங்களின் பெயர் முகவரி செல்போன் நம்பர் உள்ளிட்டவைகளை எழுதி குழுக்கள் பரிசு பெட்டியில் போட வேண்டும் .

தீபாவளிக்கு மறுநாள் குலுக்கள் நடைபெறும். குழுக்களில் 61 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக இருசக்கர வாகனம் , இரண்டாம் பரிசாக எல் இ டி டிவி , மூன்றாம் பரிசாக வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து சோபா செட், சைக்கிள், மிக்ஸி, வெட் கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட 61 வகையான பொருட்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்த குலுக்கல் போட்டியில் தற்போது வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கூப்பன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் 5 ஆயிரம் கூப்பன்கள் வரை செல்லும் எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி பழைய பத்து ரூபாய் நோட்டு போன்று இருப்பதால் பழைய பத்து ரூபாய் கொடுத்து சிக்கன் பிரியாணி பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆஃபர் இங்கே உள்ளது .
newstm.in