
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தயானந்த சாகர் என்ற பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கேண்டீனில் சக மாணவ மாணவிகள் சூழந்திருக்க, இரு மாணவிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் ஒரு மாணவி பேசி கொண்டிருக்கும்போதே, திடீரென மற்றொரு மாணவியின் கன்னத்தில் பளார் என்று அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த, அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பல முறை அந்த மாணவியை அடிக்கிறார்.
இந்த சம்பவம் நடந்தபோது, உடனிருந்த மாணவிகள் சண்டையை தடுக்க முன்வராமல், தூண்டி விடும் வகையில் ஒன்றாக கோஷம் எழுப்பியுள்ளனர். எனினும், இந்த மோதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் 2 ஆசிரியைகள் மோதி கொண்ட காட்சிகள் வைரலான நிலையில், பெங்களூருவில் மாணவிகள் மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.