வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: செல்லாத நோட்டு குறித்த வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,” என, பிரதமர் நரேந்திர மோடி 2016 ம்ஆண்டு நவம்பர் 8-ம் தேதி , அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்புகளால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
![]() |
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்ஜி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரானார், ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement