43 வயதானாலும் சண்டை போட பிடிக்கும்.. காரணத்தை அடுக்கும் கம்பீர்!

Gautam Gambhir: கெளதம் கம்பீர் இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய பங்கு வகிக்கவில்லை என்றாலும் ஒருநாள் கிரிக்கெட்டின் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். குறிப்பாக 2011 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதியில் 97 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

Add Zee News as a Preferred Source

ஒருபக்கம் பேட்டிங்கில் அதிரடி காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை விட எதிரணியில் இருப்பவர்களுடன் சண்டையிட்டு பிரபலமானதுதான் அதிகம். அதிலும் நட்சத்திர விராட் கோலியுடன் 2013ல் கெளதம் கம்பீர் களத்தில் வைத்து மோதிக்கொண்டதை யாராலும் மறக்க முடியாது. ஓய்வுக்கு பின்னரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். 

அப்போது ஒரு போட்டியில் நவின் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. ஆலோசகராக இருந்த கம்பீரும் மைதானத்திற்குள் வந்து விராட் கோலியுடன் சண்டையிட்டார். இந்த நிலையில், 43 வயதானாலும் தமக்கு சண்டையிடுவது மிகவும் பிடிக்கும் என்ற வகையில் கெளதம் கம்பீர் பேசி உள்ளார். அதேபோல் தனது வீட்டில் குழந்தைகள் பார்ப்பார்கள் என்பதால் தற்போது சண்டையிடுவதை குறைத்துக்கொண்டதாக அவர் கூறி இருக்கிறார். 

இது தொடர்பாக இன்று (அக்டோபர் 10) டெல்லியில், அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வரும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் போட்டியின்போது, HOME TOWN HERO என்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசினார். “நான் இன்னும் ஆக்ரோஷமாக இருக்கிறேன். ஆனால் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பதறமான சூழ்நிலைகளில் நான் முதலில் என்னுடைய உள்ளுணர்வுகளை பின்பற்ற முயற்சித்து வருகிறேன். எனது முதல் எதிர்வினை சண்டையை ஏற்றுக்கொள்வதுதான். ஆனால் வயது ஏற ஏற வீட்டில் குழந்தைகள் இருக்கிறார் என்பது நினைவுக்கு வருகிறது” என கம்பீர் கூறினார். 

ராகுல் டிராவிட்டுக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்றார். இந்த சூழலில், வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீட்டிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.