வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு கடத்திர வரப்பட்ட ரூ. 17 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குஜராத்தின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான முந்த்ரா துறைமுகத்திற்கு இன்று கண்டெய்னர்கள் வந்திறங்கின. இதில் சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சந்தேகத்தின் பேரில் கண்டெய்னர்களை வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் திறந்து பார்த்த போது வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
![]() |
இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ. 17 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement