தருமபுரியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து ஒருவயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமனூர் ஜீவா நகரைச் சேர்ந்த அருணகிரி – சுகுணா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுகுணா அடுப்பிலிருந்து கொதிக்கும் சாம்பாரை எடுத்து கீழே வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தேன்மொழி என்ற அவரின் ஒரு வயது குந்தை நிலை தடுமாறிக் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சுகுணா உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
இதையடுத்து குழந்தைக்கு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in