தருமபுரி: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தாயின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மகன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உடலை மீட்டுத்தரகோரி தருமபுரி எர்ரப்பட்டியை சேர்ந்த சேட்டு என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 3 நாட்களாக என் அம்மாவின் உடல் கோட்டையம் மருத்துவக்கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தாமதப்படுத்தாமல் தாயின் உடலை தருமபுரிக்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.