சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் சத்யா(20). வழக்கம் போல் இன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ரயில் வந்தபோது சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியுள்ளார்.
இளைஞர் தள்ளியதில் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்த பெண் மீது ரயில் ஏறியதில் மாணவி உடல் நசுங்கி பலியானார். ரயில் சென்ற பிறகு தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.