
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Technician (Printing)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.18780 – 67,390
வயதுவரம்பு: 14.11.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் லித்தோ ஆஃப்செட் மெஷின் மைண்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைண்டர், ஆஃப்செர்ட் பிரிண்டிங், பிளேட்மேக்கிங், எலக்ட்ரோபிளேட்டிங், பிளேட் மேக்கர் கம் இம்போசிட்டர், ஹேண்ட் கம்போஸிங் பிரிவில் முழுநேர ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது, பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: ஹைதராபாத், பாட்னா, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, போபால், இந்தூர், ஜபால்பூர், குவாலியர், மும்பை, நாக்பூர், புனே, ஜெய்ப்பூர், கொல்கத்தா.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bnpdewas.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-11-2022
மேலும் விவரங்களுக்கு: https://bnpdewas.spmcil.com/UploadDocument/14%20posts%20Advt.%20(Eng.).9ff35daf-9bad-4f70-9e46-c4bd440a0f37.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.