
கடந்த 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ‘சாசுரால் சிமார் கா’ என்ற இந்தி தொடர், தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ‘மூன்று முடிச்சு’ என்ற பெயரில் வெளியானது.
அந்த சீரியலின் கதாநாயகி சீமாவின் மகளாக அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் வைஷாலி தக்கார். இவர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் சில காலம் வரை தான் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது முன்னாள் காதலனால் தான் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்த அவர், தனக்கு வரப்போகும் கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங் என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் அபிநந்தனை தான் திருமணம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் முன்னாள் காதலனால் தற்கொலை செய்வதாக குறிப்பு எழுதி வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in