தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாகி வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 22-ஆம் தேதி சென்னை மண்டலத்தில் 38.64 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 41.36 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40.82 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 45.26 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 39.34 கோடி ரூபாய் என மொத்தமாக 205.42 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளன.
அதேபோல தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான (23.10.2022) அன்று சென்னை மண்டலத்தில் 51.52 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 50.66 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 52.36 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 55.78 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48.47 கோடி ரூபாய் என மொத்தம் 258.79 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையான நேற்று மட்டும் 244 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 48.80 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 47.78 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 49.21 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 52.87 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 45.42 கோடி ரூபாய் என மொத்தமாக 244.08 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
ஆக மொத்தம் 3 நாட்களில் 708 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
