"ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் பள்ளிகளின் கள நிலவரம் தெரியாது!" – சொல்கிறார் அன்பில் மகேஸ்

இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்திருக்கிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கூடலூரில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். நூற்றாண்டுகளைக் கடந்து ஊட்டியில் இயங்கி வரும் பிரீக்ஸ் (அரசு உதவிபெறும்) பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழகத்தில் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படும் நோக்கத்தில் நமது முதல்வர் ஸ்டாலின் நிதியை வாரி வழங்குகிறார். இந்த நிதி அனைத்தும் முறையாக பள்ளிகளுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யவும் பள்ளிகளுக்கான தேவைகளை அறியவும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். முதல்வர் உத்தரவின் பேரில் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறோம். நூலகம், வகுப்பறை, கல்வித்துறை அலுவலகம் என 77 வகையான ஆய்வுகள் உள்ளன. ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால் பள்ளிகளின் கள நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியாது என்பதற்காகவே இந்த கள ஆய்வு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.