இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மேற்கொள்ள 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தேதியை முன்னிட்டு திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கண்காணிக்க பத்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது. இந்த பத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மாதம் இருமுறை வாக்காளர் சரிபார்ப்பு பணியினை மேற்பார்வை இடுவார்கள்.
அதன்படி, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டத்திற்கும். பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும். தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக இயக்குனர் சோபனா கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்களுக்கும். துணிநூல் ஆணையரக ஆணையர் வள்ளலார் அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கும்.
மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஆபிரகாம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கும். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சிவசண்முகராஜா கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கும். அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இயக்குனர் மகேஸ்வரன் திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கும். சிறு கூறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு செயலாளர் மகேஸ்வரி மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும். நில நிர்வாக ஆணையரக ஆணையர் ஜெயந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், பெயரை நீக்குதலுக்காக சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.