வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோட்டபட்டோ,-தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்சில், கன மழை காரணமாக, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்; 16 பேர் மாயமாகி உள்ளனர்.
![]() |
இது குறித்து, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நகிப் சினாரிம்போ நேற்று கூறியதாவது:
பிலிப்பைன்சின் மகுயின்தனோவோ மாகாணத்தில் உள்ள மூன்று நகரங்களில், நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், தண்ணீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் 42 பேர் உயிர்இழந்துள்ளனர்; 16 பேர் மாயமாகியுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் திடீரென உயர்ந்ததால், கிராமத்தினர் தங்கள் வீடுகளின் கூரைகளில் ஏறி காப்பாற்றிக் கொண்டனர்.
அவர்களை, ராணுவத்தினர், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டனர்.
பல்வேறு பழங்குடியின கிராமங்களில் தீவிர மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
இதற்கிடையே, நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இன்று ‘நால்கே’ என பெயரிடப்பட்டிருக்கும் புயல் வீசக்கூடும் என, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இப்பகுதிகளில் இருந்து, ௫,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement