இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை புண்படுத்துவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. குர்ஆனின் புனிதத்தன்மை அவமதித்ததன் காரணமாக, மத நல்லிணக்கம் மற்றும் அமைதி சீர்குலைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோஜ்வாடா பகுதியில் ஒரு நபர் திருக்குர்ஆனை தண்ணீரில் வீசினார். இதனையடுத்து திருக்குர்ஆனைப் புண்படுத்திய நபரை உடனடியாகக் கைது செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அகமது மிர் என்ற நபர் இரவோடு இரவாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று ஸ்ரீநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நவ்வட்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
newstm.in