தென்கொரியா Halloween கொண்டாட்டம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரிப்பு

தென்கொரியாவில் ஹாலோவீன் Halloween திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடிதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் நிகழ்வு இது என்பதால் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.

பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

000இந்நிலையில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.