9 ஐபிஸ் அதிகாரிகளை மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு.! 

தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.   இதைத் தொடர்ந்து, கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையிட ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கடராமன் கூடுதலாக நிர்வாக பிரிவை கவனிப்பார். அதேபோல், போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபி பதவியை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக … Read more

எப்போ முடியும் இந்த கொடுமை..!! பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்..!!

பெருந்துறை அடுத்த பாலக்கரை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 35 குழந்தைகள் 5 ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். பாலக்கரை, கூலிக்காட்டு வலசு, இந்திரா நகர் பகுதிகளை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளே இதில் அதிகம் உள்ளனர். இந்த குழந்தைகளை தினமும் இருவர் வீதம் பிரித்து பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை தூய்மைபடுத்தும் பணியில் தலைமை ஆசிரியை ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. கிருமி நாசினிகளை மாணவர்கள் வெறும் கைகளில் பயன்படுத்தியதால் அவர்களுக்கு கைகளில் … Read more

கடந்த 2 நாட்களில் மின் இணைப்புடன் 26 லட்சம் நுகர்வோர் ஆதார் எண் இணைப்பு: சிறப்பு கவுன்ட்டர்களில் குவிந்த மக்கள்

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 2-வது நாளாக சிறப்பு கவுன்ட்டர்களில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 26 லட்சம் பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக, டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுன்ட்டர்களில் இதற்கான … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: சவூதி அரேபியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது மெக்சிகோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு சி-யில் உள்ள சவூதி அரேபியா – மெக்சிகோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சவூதி அரேபியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.

முதல் காலாண்டை விட பாதியாக சரிந்தது: 2வது காலாண்டில் 6.3% ஜிடிபி வளர்ச்சி

புதுடெல்லி: தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘2022-23ம் நிதியாண்டின் ஜூலை – செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக உள்ளது.  கடந்த 2021-22ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 8.4 சதவீதமாக ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.38.17 லட்சம் கோடியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீதமாக அதிகரித்து ரூ.64.95 … Read more

ஐ.என்.எஸ்., விக்ராந்த் ஒருங்கிணைப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவு| Dinamalar

புனே, ”நம் கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்துடன், விமானங்களின் ஒருங்கிணைப்பு அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்,” என, கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் தெரிவித்தார். மஹாராஷ்டிராவின் புனேவில் நேற்று நடந்த தேசிய ராணுவ அகாடமி பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற ஹரிகுமார் கூறியதாவது: நம் கடற்படையை நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 1960ல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய கப்பல் நம் படையில் இணைக்கப்பட்டது. இதன்பின் படிப்படியாக … Read more

மருத்துவமனை பெயர் விவகாரத்தில் யசோதா படக்குழு சுமூக முடிவு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா என்ற திரைப்படம் வெளியானது. இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரீஷ் சங்கர் இயக்கியுள்ள இந்தப்படம் தற்போது மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட வாடகைத்தாய் விவகாரத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் வாடகைத்தாய் முறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்திருந்தன. அதேசமயம் படத்தில் காட்டப்பட்ட மருத்துவமனையின் பெயரிலேயே நிஜமான மருத்துவமனை இருப்பதும் … Read more

இந்தியாவுடனான உறவில் தலையிடக் கூடாது சீனா எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் தகவல்| Dinamalar

வாஷிங்டன், ‘இந்தியாவுடனான தங்களுடைய உறவில் தலையிடக் கூடாது’ என, சீன ராணுவம் எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் கிழக்கு லடாக்கில், ௨௦௨௦ மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை, நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், இரு நாடுகளும் சில இடங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற்றன. அதே நேரத்தில் பல இடங்களில் இரு … Read more

திண்டுக்கல் அருகே ஷாக்: 14 வயது சிறுமி கர்ப்பம்.! போக்சோவில் கூலித்தொழிலாளி கைது.!

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பையா (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்பு சிறுமியை காதலிப்பதாக கூறி தனிமையில் சந்தித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சடைந்து இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். … Read more