மேற்கு வங்கம் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
மேற்குவங்க மாநிலம் சாலிமாரில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் டெர்மினசுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது.
இந்த ரயில் இன்று காலை 8.43 மணிக்கு நாசிக் ரோடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயிலின் பார்சல் வேன் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் 45 நிமிடத்தில் தீயை அணைத்தனர். பார்சல் பெட்டியில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.
newstm.in