
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 9 பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய பிரகாஷ் மற்றும் ஏசு ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

மேலும், இருவரும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 9 பெண்களை பத்திரமாக மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in