இலங்கையின் குளிர் கால சுற்றுலா ஆரம்பம்

நவம்பர் மாதம் முதல் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் இது வெற்றிகரமான ஆரம்பமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பமானதை தொடர்ந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், இதில் முதல் இடத்தை ரஷ்யா பெற்றுள்ளது. மேலும் இதுவரையில் 5 இலட்சத்து 76 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அதன் out-of-the-box வெளியிட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் உலக கால்பந்து ரசிகர்களை நீர்கொழும்பில் அமையப்பெற்றுள்ள ‘FIFA Zone’ க்கு ஈர்க்க பயணப் பொதிகளை (Travel packages) அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.