தொடர் கொள்ளை மற்றும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை மற்றும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியாங்குப்பம் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு அடகு கடையின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கிலி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அடகு கடை மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து, 75 சவரன் தங்கநகை, 9 கிலோ வெள்ளி மற்றும் 20 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.