முதல்வர் திடீர் உத்தரவு; கலங்கிப்போன அமைச்சர்கள்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில், முதல்வர்

மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்களின் வளர்ச்சி மற்றும் பயன்கள் தொடர்பாக அறியவும் துறை சார்ந்த செயலர் மற்றும் அலுவலர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி விபரங்களை கேட்டறிந்து வருகிறார்.

அப்போது தான் தமிழக அமைச்சர்கள் தலைமைச்செயலகம் வருவது குறைவாக இருப்பதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியூர் சென்றால் அமைச்சர்கள் யாரும் தலைமைச் செயலகம் பக்கம் தலைவைத்து கூட படுப்பதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகவே அமைச்சர் அலுவலகங்களில் அதிகளவில் கோப்புகள் தேக்கம் அடைந்து, பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலினிடம் புகாரளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் டென்ஷன் ஆன முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் வந்து அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் துறை பணிகளை மேற்கொள்கின்றனரா? என கண்காணித்து வருகிறார்.

அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட திடீரென முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து அமைச்சர்கள் அறையை தொடர்புகொண்டு அதிகாரிகள் பேசி உள்ளனர்.

அப்போது ‘அமைச்சர்கள் அறையில் உள்ளாரா?’ என அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தலைமை செயலகத்தில் தங்கள் அறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் வாரத்துக்கு குறைந்தது 4 நாட்களாக தலைமைச்செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவு போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் அனைவரது வருகையையும் கண்காணிக்கிறார் என்பதை அறிந்து, அமைச்சர்கள் பலரும் தற்போது தலைமைச் செயலகத்துக்கு வர துவங்கி உள்ளதால் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.